‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு எண்ட் கார்ட் போடும் விஜய் டிவி?!


சென்னை: 'குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு எண்ட் கார்ட் போட உள்ளதாம் விஜய் தொலைக்காட்சி.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ ஐந்து சீசன்களை முடித்துள்ளது. மற்ற எந்த சீசன்களிலும் இல்லாத அளவிற்கு இந்த ஐந்தாவது சீசன் பேசுபொருளானது. இதற்கு காரணம் நான்கு சீசன்களிலும் நிகழ்ச்சியின் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘டாப்பு குக்கு டூப்பு குக்கு’ நிகழ்ச்சியில் நடுவரானார்.

அதேபோல, இந்த ஐந்தாவது சீசனில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு விலகினார். இதற்கு காரணமாக போட்டியாளராக இருந்த பிரியங்காவை கைக்காட்டியவர், தன் தொகுப்பாளர் வேலையில் பிரியங்கா தலையிடுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இது இணையத்தில் பேசுபொருளானது.

மேலும், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை தயாரித்த நிறுவனம்தான் விஜய் டிவியை விட்டு விலகி சன் டிவியில் ‘டாப்பு குக்கு டூப்பு குக்கு’ நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். எனவே, இரண்டு நிகழச்சிகளிலும் பேட்டர்னும் ஒரே மாதிரியாக இருப்பதாலும் விமர்சனம் கிளம்பியது. இதனால், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு எண்ட் கார்டு போட இருக்கும் விஜய் டிவி அதற்கு பதிலாக ’குக்கிங் வித் விஜய் ஸ்டார்’ என அதே போன்றதொரு சமையல் ரியால்டி நிகழ்ச்சியை கொண்டு வர இருக்கிறார்களாம். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள்.

x