கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு கலை ஞர் நினைவு கலைத்துறை வித் தகர் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2022-23ம் ஆண்டுக்கான செய்தித்துறை மானிய கோரிக்கை யில், தமிழ்த்திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றும் வகையில், "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” ஆண்டுதோறும், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி வழங்கப் படும் என்றும், விருதாளர்களுக்கு ரூ.10 லட்சம், நினைவுப் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதை செயல்படுத்தும் வகையில், விருதாளர்களைத் தேர்வு செய்ய இயக்குநர் எஸ் பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் கரு. பழனியப்பன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப் பட்டது.
இக்குழு பரிந்துரைப்படி, 2023-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய, பி.சுசீலா வுக்கும், கவிஞர் மு.மேத்தாவுக்கும் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இருவருக்கும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும் நினைவுப் பரிசையும் முதல்வர் நேற்று வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச்செயலர் நா.முருகானந்தம், தமிழ் வளர்ச் சித்துறை செயலர் வே.ராஜாராமன், செய்தித்துறை இயக்குநர் இரா. வைத்திநாதன், விருதாளர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து! - விருது பெற்ற பாடகி பி.சுசீலா, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை, முதல்வர் முன்னிலையில் பாடினார். தொடர்ந்து, 'காகித ஓடம்...' பாடலையும் பாடினார்.