பிரபல மலையாள நடிகர் மோகன் ராஜ், உடல்நலக்குறைவால் அவருக்கு வயது 70. காலமானார். மோகன்லாலின் 'கிரீடம்' படம் மூலம் பிரபலமான மோகன் ராஜ், அந்தப் படத்தில் 'கீரிகடன் ஜோஸ்' என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இது பேசப் பட்டதால், அந்த கதாபாத்திரத்தின் பெயரிலேயே அழைக்கப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வந்த அவர், தமிழில், ரஜினியின் தர்மதுரை, சந்திரமுகி, விக்ரமின் தில், அமீரின் ஆதிபகவன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களாக பார்கின்சன் மற்றும் நீரிழிவு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். அவர் மறைவுக்கு மோகன்லால், மம்மூட்டி உட்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த மோகன்ராஜுக்கு உஷா என்ற மனைவி, ஜெய்ஷ்மா, காவியா ஆகிய மகள்கள் உள்ளனர்.