இந்த வாரம் தியேட்டர், ஓடிடி ரிலீஸ் என்னென்ன?


சென்னை: இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதைப் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குநராக அறிமுகமாகி இருப்பவர் சம்யுக்தா விஜயன். இவரது இயக்கத்தில் இந்த வாரம் ‘நீல நிறச்சூரியன்’, விநாயகனின் ‘தெக்கு வடக்கு’, 'ஒரே பேச்சு ஒரே மூச்சு’, ‘செல்லக்குட்டி’. ’சீரன்’, வாக்கின் ஃபீனிக்ஸின் ‘ஜோக்கர்’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்தப் படங்களோடு திரையரங்குகளில் வெளியாகி நேரடியாக ஓடிடியில் வெளியாகி இருக்கும் படங்கள் பட்டியலில் விஜயின் 'GOAT' நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியிலும், சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபுவின் ‘போட்’ திரைப்படம் அமேசான் ஒடிடியிலும் வெளியாகி இருக்கிறது. இதோட நடிகை நிவேதா தாமஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’35- சின்ன கதா காடு’ தெலுங்கு படத்தை ஆஹா ஓடிடியில பார்க்கலாம்.

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் படங்களில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் ‘தி பிளாட்ஃபார்ம்2’ படமும் அனன்யா பாண்டேவின் ’CTRL' திரைப்படமும் வெளியாகிறது.

A post shared by Hindu_Tamil (@hindu_tamil)

x