அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த நடிகர் பிரசன்னா!


சென்னை: நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிகர் பிரசன்னா இணைந்துள்ளார்.

’விடாமுயற்சி’ படத்தை அடுத்து நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான சமயத்திலேயே படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்தில் அஜித் நெகட்டிவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹைதராபாத்தில் ஏற்கனவே படத்தின் முக்கிய போர்ஷன்கள் படமாக்கப்பட்டது. அடுத்து ஜப்பானிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், அஜித்துடன் இணைந்து பிரசன்னாவும் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார். ’குட் பேட் அக்லி’ படத்தில் நடிப்பதன் மூலம் அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறி இருப்பதாக பிரசன்னா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்திருப்பதாவது, ‘’மங்காத்தா’ பட சமயத்தில் இருந்தே நானும் அஜித்தின் படங்களில் நடிப்பேனா என்பதை எதிர்பார்த்திருப்பேன். ரசிகர்களும் அவரது முந்தைய படங்களில் நான் இருக்கிறேன் என நினைத்து வாழ்த்தினார்கள். ஆனால், அப்போது நடக்காத அந்த விஷயம் இப்போது நடந்துள்ளது. அஜித் சார், ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. என்னுடைய போர்ஷனுக்கான படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அஜித் சார் மிகவும் எளிமையானவர், அன்பானவர்’ எனக் கூறியிருக்கிறார்.

x