நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு முன்னாள் அமைச்சர் கேடிஆர் தான் காரணம் என்று அமைச்சர் சுரேகா பேசியிருந்தது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவருக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் நாகசைதன்யா தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘விவாகரத்து ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் வலிமிகுந்த முடிவு. பல யோசனைகளுக்குப் பிறகுதான் நானும் எனது முன்னாள் மனைவியும் இந்த முடிவுக்கு வந்தோம். எங்களது வெவ்வேறு லட்சியங்களை நோக்கி பயணித்து வருகிறோம். இருந்தாலும் எங்கள் விவாகரத்துப் பற்றி பல யூகங்களும் அடிப்படை ஆதாரமற்ற செய்திகளும் உலா வருகிறது. இருந்தாலும் சமந்தா மற்றும் என் குடும்பத்தினர் மீது வைத்திருக்கும் அளவு கடந்த மரியாதை காரணமாகவே நான் அமைதியாக இருந்தேன். ஆனால், அமைச்சர் கொண்டா சுரேகா பேசியிருக்கும் விஷயம் ஏற்றுக் கொள்ள முடியாது. பிரபலங்கள் என்பதாலேயே ஒருவரின் தனிப்பட்ட வாழ்வில் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்ளவது அநாகரிகம்’ எனக் கூறியுள்ளார்.
நடிகை சமந்தாவும் அமைச்சர் சுரேகாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘சவாலான இந்த சினிமாத் துறையில் பெண்ணாக என்னுடைய பயணத்தை சிறுமைப்படுத்தி விடாதீர்கள். தனிநபரின் பிரைவசியை மதித்து நடந்து கொள்ளுங்கள். விவாகரத்து என்னுடைய தனிப்பட்ட விவகாரம். இரண்டு பேரின் சம்மதத்துடன் இணக்கமாக நடந்த விஷயம். இதில் அரசியல் தலையீடுகள் எதுவும் இல்லை. அரசியல் சண்டைகளில் என்னுடைய பெயரைப் பயன்படுத்த வேண்டாம்’ என தெரிவித்துள்ளார்.
— chaitanya akkineni (@chay_akkineni) October 2, 2024