ஜீ தமிழில் 'மகாநடிகை' புதிய ரியாலிட்டி ஷோ


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘மகா நடிகை’ என்ற புதிய ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது. நடிப்பில் சாதிக்கத் துடிக்கும் சாமானிய பெண்கள், தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் போட்டியாக, இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

போட்டியாளர்களைத் தேர்வு செய்வதற்காகத் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆடிஷன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அக்.5-ம் தேதி தொடங்குகிறது.

பிறகு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 8:30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகும். ஆர்ஜே விஜய் தொகுத்து வழங்கும் இதில் விஜய் ஆண்டனி, நடிகைகள் சரிதா, அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

x