வெற்றிமாறனுக்கு முன்பாக ’வாடிவாசல்’ கதையை இயக்க இருந்தவர் லிங்குசாமி என்ற விஷயத்தை இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் சூர்யா கூட்டணியில் ‘வாடிவாசல்’ திரைப்படம் முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கான டெஸ்ட் ஷூட் புகைப்படங்களும் சென்னை, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் எடுக்கப்பட்டு வெளியானது. ஆனால், டெஸ்ட் ஷூட் வெளியிடப்பட்ட நிலையில், படம் எப்போது தொடங்கும் என்ற அப்டேட் எதுவும் இல்லாமல் அமைதி காத்து வருகிறது படக்குழு.
'படத்தைக் கைவிடப்போகிறார் வெற்றிமாறன், சூர்யா படத்தில் இருந்து விலகி விட்டார்' என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால், ‘விடுதலை2’க்கு பிறகு நிச்சயம் ’வாடிவாசல்’ படம் தொடங்கும் என வெற்றிமாறன் உறுதியளித்தார். இதில் சூர்யா தொடர்வாரா அல்லது புதிய நடிகர்கள் யாரேனும் உள்ளே வருகிறார்களா என்பது தெளிவில்லை.
சூர்யாவும் ‘கங்குவா’ படத்தை முடித்துவிட்டு இப்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் பிஸியாகி உள்ளார். சிறுகதைகளையும் நாவலையும் படமாக்குவதில் ஆர்வம் கொண்டவர் வெற்றிமாறன். ’அசுரன்’, ‘விடுதலை’ படங்களின் கதைகளும் நாவல்களின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களை அடுத்து, சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற கதையைத்தான் அதே பெயரில் படமாக்குவதாக அறிவித்தார்.
இது குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை இயக்குநர் வசந்தபாலன் தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
“ ’வாடிவாசல்’ கதை முதலில் லிங்குசாமி இயக்குவதாக இருந்தது. பின்பு, நான் செய்யலாமே என்று திரைக்கதை அமைக்க முயற்சி செய்தேன். வெறும் கிராமத்து கதையாக ஜல்லிக்கட்டாக இருக்கிறதே, இதை வைத்து மட்டுமே எப்படி ஒரு திரைக்கதை அமைக்க முடியும் என்று விட்டுவிட்டோம். ஆனால், இன்று தமிழ் சினிமாவில் பலரும் அதிகம் எதிர்பார்க்கும் கதையாக ‘வாடிவாசல்’ இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...135 கி.மீ. வேகம்... கரையை கடக்கும் போது சூறையாடிய 'ரெமல்' புயல்: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை!
முதல் முறையாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம்... ராஜஸ்தான் மக்கள் அதிர்ச்சி!
திருப்பதி அருகே பயங்கர விபத்து... சாலைத் தடுப்பில் கார் மோதி 4 பேர் பலி!
சோகம்... சரத்குமார் நடித்த 'மாயி' பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!
இடைக்கால ஜாமீனை 7 நாள்கள் நீட்டிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு