சுட்டு கொல்லப்பட்ட பிரபல நடிகர்... பரபரப்பில் திரையுலகம்!


நடிகர் ஜானி வேக்டர்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் கடந்த சனிக்கிழமை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’ஜெனரல் ஹாஸ்பிட்டல்’, ‘ஹாலிவுட் கேர்ள்’, ‘அனிமல் கிங்டம்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்தவர் நடிகர் ஜானி வேக்டர் (37). அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஜானி தாக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது தயார் ஊடகங்களிடம் கூறினார். திருடர்கள் அவரது காரில் இருந்து வினையூக்கி மாற்றியைத் (catalytic converter) திருட முயன்றனர்.

நடிகர் ஜானி வேக்டர்

ஜானி அவர்களுடன் சண்டையிட முயற்சிக்கவில்லை. இருந்தாலும் திருடர்கள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டதாக கண்ணீர் மல்க அவரது தாயார் சொல்லி இருக்கிறார். இந்த சம்பவம் நடந்த உடனேயே ஜானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையில் ஜானியின் குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் யாரையும் காவல்துறை இன்னமும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜானியின் முகவர் டேவிட் ஷால் இவரின் மரணச் செய்தியை உறுதிப்படுத்தி ஊடகத்திடம் பேசியதாவது, “ஜானி அர்ப்பணிப்புள்ள திறமையான நடிகர் மட்டுமல்ல, அவரை அறிந்த அனைவருக்கும் ஒரு உண்மையான தார்மீக முன்மாதிரி.

நடிகர் ஜானி வேக்டர்

கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் விட்டுக்கொடுக்காத மனப்பான்மை ஆகியவற்றில் சிறந்தவர். இந்த சவாலான சினிமா துறையில் உயர்வு, தாழ்வு என எது வந்த போதிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தார். எப்போதும் நம் நினைவில் இருப்பார்” என்று உருகியுள்ளார்.

இந்த சம்பவம் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக திரைக்கலைஞர்கள் பலரும் இவரது மறைவுக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

x