பிரபல நடிகைக்கு 3வது திருமணம்... ரசிகர்கள் வாழ்த்து!


மீரா கிருஷ்ணன் திருமணம்...

பிரபல நடிகை மீரா கிருஷ்ணனுக்கு மூன்றாவது முறை திருமணம் நடந்துள்ளது. அவரது புது வாழ்க்கைக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

’லெசன்ஸ்’, ‘சைலென்ஸர்’ உள்ளிட்டப் பல மலையாளப் படங்களில் நடித்தவர் நடிகை மீரா கிருஷ்ணன். தமிழிலும் ‘ஜெர்ரி’, ‘அடங்க மறு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 21ம் தேதி திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த செய்தியை அவர் நேற்று தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

’நானும் விபினும் கோயம்புத்தூரில் கடந்த 21ம் தேதி திருமணம் செய்து கொண்டோம். பாலக்காட்டைச் சேர்ந்தவரான விபின் ஒளிப்பதிவாளர். நானும் இவரும் கடந்த மே மாதம் 2019ம் ஆண்டில் ஒன்றாக பணிபுரிந்து வருகிறோம். வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் ஒன்றாகவே பார்த்து வருகிறோம்.

எங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இரண்டு, மூன்று நண்பர்களுடன் திருமணம் செய்து கொண்டோம். இந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. எங்களுக்கு உங்களுடைய அன்பும் ஆசீர்வாதமும் தேவை’ எனப் பதிவிட்டுள்ளார்.

விபின், மீரா கிருஷ்ணன் இருவரும் மலையாளத்தில் ’குடும்பவிளக்கு’ சீரியலில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அதன் படப்பிடிப்பில் துவங்கிய நட்பு காதலாகி திருமணத்தில் ஒன்று சேர்ந்துள்ளனர்.

நடிகை மீரா கிருஷ்ணன் இதற்கு முன்பு விஷால் அகர்வால் என்பவருடனும், ‘சார்பட்டா’ புகழ் நடிகர் ஜான் கொக்கேனுடனும் திருமணம் ஆகி விவாகரத்துப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x