”என்னுடைய ரசிகைகளை காயப்படுத்த மாட்டேன்” என நடிகர் பிரபாஸ் உருகியுள்ளார்.
டோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் நாற்பது வயதைக் கடந்திருந்தாலும் இன்னும் திருமணம் செய்யாமல் பேச்சுலராக வலம் வருகிறார். ’பிரபாஸின் திருமணம் எப்போது? யார் அவரின் வருங்கால மனைவி?’ என்பதுதான் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி.
நடிகை அனுஷ்காவும் பிரபாஸூம் நல்ல நண்பர்கள் என்பதால், இந்த ‘பாகுபலி’ ஜோடி நிஜத்திலும் சேர வேண்டும் என்பதுதான் பலரின் விருப்பம். ‘சீக்கிரம் இவர்களுக்குத் திருமணம்’ என அவ்வப்போது செய்திகள் வந்தாலும், வந்த வேகத்திலேயே காணமால் போய்விடும். இருவரும் இதை உறுதிப்படுத்தவும் இல்லை.
இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ‘என் வாழ்க்கையில் வர இருக்கும் ஸ்பெஷலான நபர்’ என புதிரான பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார் பிரபாஸ். உடனே, அவருக்கு திருமணம் என பரபரத்தார்கள் நெட்டிசன்கள். அவரிடம் இதுகுறித்து, பாலிவுட் ஊடகம் ஒன்று சமீபத்திய பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளது.
அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, “நான் இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை! ஏனெனில், என்னுடைய ரசிகைகளின் உணர்வுகளைக் காயப்படுத்த விரும்பவில்லை” என்று கூறியுள்ளார். இது பிரபாஸின் பெண் ரசிகைகளை பெருமூச்சு விட வைத்துள்ளது. பிரபாஸின் கைவசம் தற்போது ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சாட்டையால் அடிவாங்கும் விநோத திருவிழா... பயபக்தியுடன் குவிந்த பக்தர்கள்
பாஜகவின் டபுள் இஞ்சின் இம்முறை கட்டாயம் தடம் புரளும் -அகிலேஷ் யாதவ் ஆருடம்
அதிர்ச்சி... மினிபேருந்து மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி!
விடிய விடிய நடந்த விருந்தில் கொக்கெய்ன், ஹைட்ரோ கஞ்சா அடித்த நடிகைகள்... பெங்களூருவில் நடந்தது என்ன?