”நான் இப்போதைக்கு சிங்கிள் தான். அடுத்த ரிலேஷன்ஷிப்பிற்கு ரெடி” என ஓப்பனாகப் பேசியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.
ஒருவருடன் காதில் வயப்பட்டாலும், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் சமூகத்தைப் பற்றி எந்த அலட்டலும் இல்லாமல் வெளிப்படையாக சொல்ல நடிகை ஸ்ருதிஹாசன் எப்போதும் தயங்கியதே கிடையாது. பிரபல டாட்டூ ஆர்டிஸ்ட் சாந்தனுவைக் காதலித்து வந்தார் ஸ்ருதி. இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். ஆனால், திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பரஸ்பரம் பிரிந்தனர்.
’சிலரின் உண்மை முகங்கள் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது’ என நடிகை ஸ்ருதிஹாசன் மறைமுகமாக தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு, இருவருக்கும் இடையேயான பிரேக்கப்பை உறுதி செய்தார். மேலும், சாந்தனுவுடனான புகைப்படங்களைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கியவர் அவரை அன்ஃபாலோவும் செய்தார்.
இந்நிலையில், தனது சமூகவலைதளப் பக்கத்தில் நேற்று நேரலையில் வந்து ரசிகர்களிடையே பேசிய நடிகை ஸ்ருதிஹாசன், ரசிகர் ஒருவர் அவரின் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்ஸ் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது எனக்கு மகிழ்ச்சியான விஷயம் இல்லை. இருந்தாலும் இதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
நான் இப்போது சிங்கிள் தான். இன்னொருவருடன் மிங்கிள் ஆகத் தயாராகவும் இருக்கிறேன். இப்போதைக்கு என் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி சந்தோஷமாக இருக்கிறேன்” என்று அடுத்த ரிலேஷன்ஷிப்பிற்கு தான் ரெடி என்பதையும் சொல்லி இருக்கிறார்.
சாந்தனுவுக்கு முன்பாக லண்டனைச் சேர்ந்த மைக்கேல் என்பவரை ஸ்ருதி டேட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.