தனது தோழியோடு மொட்டை மாடியில் சிலம்பம் சுற்றியிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். இந்தப் புகைப்படங்களை அவர் பகிர்ந்திருக்கிறார்.
பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தில் மாளவிகாவுக்கு முக்கியமான கதாபாத்திரம் ஹீரோவோடு சேர்ந்து இவருக்கும் ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது என்பதால் சிலம்பம் சுற்றக் கற்றுக் கொண்டார். சிலம்பத்திற்காக பயிற்சி எடுக்கும் வீடியோக்களை அவ்வப்போது இணையதளத்தில் பகிர்ந்து வந்தார் மாளவிகா.
இப்போது படப்பிடிப்பு முடிந்த பின்னரும் சிலம்பம் சுற்றும் பயிற்சியை அவர் கைவிடவில்லை. தனது பக்கத்து வீட்டுத் தோழியுடன் அப்பார்ட்மெண்ட் மாடியில் சிலம்பம் சுற்றியிருக்கிறார் மாளவிகா.
இந்தப் புகைப்படங்களை பகிர்ந்திருப்பவர், ’சிலம்பம் சுற்ற இப்படி ஒரு தோழி கிடைப்பது சூப்பர்!’ எனப் பதிவிட்டுள்ளார். இவரிடம் ரசிகர்கள் கமெண்ட்டில் ‘தங்கலான்’ படம் எப்போது ரிலீஸ் எனக் கேட்டு வருகின்றனர். ஏனெனில், ‘தங்கலான்’ படம் இந்த வருடம் கோடைக் கொண்டாட்டமாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பட ரிலீஸ் தள்ளிப் போனது. இன்னும் படம் எப்போது ரிலீஸ் என அறிவிக்கப்படாமல் இருக்கிறது. ‘தங்கலான்’ படத்தை முடித்து விட்டு விக்ரம், அருண் இயக்கத்தில் அடுத்தப் படமான ‘வீர தீர சூரன் பார்ட்2’ படத்தில் நடித்து வருகிறார். அதனால், சீக்கிரம் ‘தங்கலான்’ படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்பதுதான் ரசிகர்களின் வேண்டுகோள்.
இதையும் வாசிக்கலாமே...
லிவிங் டூ கெதர் வாழ்க்கை... நடிகை இறந்த ஒரே வாரத்தில் சின்னத்திரை நடிகரும் தற்கொலை!
சிறுவன் உயிரிழந்த விவகாரம்... குற்றாலம் அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு!
அதிர்ச்சி... 4 மாதங்களில் 430 கொலைகள்... கதி கலங்க வைக்கும் புள்ளி விவரம்!
இசையமைப்பாளர் ரஹ்மான் மகளின் புது அவதாரம்... நெகிழ்ச்சி பதிவு!
அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பை எந்த அரசாலும் மாற்ற முடியாது... அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி!