நான் மூன்றாவது திருமணத்திற்கு ரெடி இல்லை... இயக்குநர் அனுராக் கஷ்யப்!


அனுராக் கஷ்யப்

”நான் மூன்றாவது திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் ரிலேஷன்ஷிப்பிற்கு தகுதியானவன் கிடையாது” என இயக்குநர் அனுராக் கஷ்யப் கூறியிருக்கிறார்.

'யுவா’, ‘தி லன்ச் பாக்ஸ்’ உள்ளிட்டப் பல படங்களை பாலிவுட்டில் இயக்கியவர் அனுராக் கஷ்யப். தமிழிலும் ‘இமைக்கா நொடிகள்’, ‘லியோ’ உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தன்னை சந்திக்க வேண்டும் என்றால் தான் நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று சமூகவலைதளத்தில் சொல்லி அதிர்ச்சி கூட்டினார்.

மகளுடன் அனுராக்

இப்போது தனது மகள் ஆலியா கஷ்யப் பாட் காஸ்ட்டில் தனக்கு மூன்றாவது திருமணம் நடக்காது என்றும் தான் ரிலேஷன்ஷிப்பிற்குத் தகுதியானவன் இல்லை என்றும் கூறியுள்ளார். இதற்கு முன்பு அனுராக் காஷ்யப் எடிட்டர் ஆர்த்தி பஜாஜை திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமண உறவு நீடிக்கவில்லை. பின்பு, நடிகை கல்கி கோச்லினை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

தற்போது அவர் தனது மகள் ஆலியா கஷ்யப்புடன் வசித்து வருகிறார். அந்த பாட்காஸ்ட்டில் அவர், “நான் இப்போது என் வேலையில் கவனம் செலுத்தி வருகிறேன். அதுவும் இல்லாம நான் ரிலேஷன்ஷிப்பிற்கு ஏற்றவன் கிடையாது. ஒருவேளை, நான் ஐரோப்பாவில் பிறந்து அங்கு திரைப்படங்களை உருவாக்கி இருந்தால், உறவுகளுக்குத் தகுதியானவனாக இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

அனுராக் காஷ்யப்

ஏனெனில் அந்த நாட்டில் ராயல்டி முறை உள்ளது. பணம் வந்து கொண்டே இருக்கும். நம் நாட்டில் அந்த ராயல்டி சிஸ்டம் இல்லை என்பதால் இன்னும் அதிகப் படங்களை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார். இதற்கு அலியா, ”நீங்களும் அம்மாவும் வேறொரு கல்யாணம் செய்து கொள்வீர்கள். எனக்கு நிச்சயம் தம்பி, தங்கை கிடைக்கும் என்று அப்போதெல்லாம் எதிர்பார்த்திருந்தேன்” என்று சொல்ல, “உன் அப்பாவுக்கு அந்த வயது கடந்துவிட்டது” என்று சொல்லி இருக்கிறார் அனுராக்.

இதையும் வாசிக்கலாமே...

x