‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!


தனுஷ், இளையராஜா, கமல்

இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் அறிவிக்கப்பட்டதில் இருந்து யார் இசையமைப்பாளர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து வந்த நிலையில், அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் உருவாகிறது என்று முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். படத்தின் திரைக்கதையை நடிகர் கமல்ஹாசன் எழுத, அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்குகிறார்.

தனுஷ், இளையராஜா

படத்தின் ப்ரீ- புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்திற்கு யார் இசையமைப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்நிலையில், இளையராஜா பயோபிக்கிற்கென்று தனியாக இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யாமல் படம் முழுக்க இதற்கு முன்பு இளையராஜா இசையமைத்த இசையைப் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார்களாம். இதனால், படத்திற்கென்று தனி இசையமைப்பாளர் இல்லை என்ற தகவல் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஏனெனில், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் எனப் பல இசையமைப்பாளர்களை ரசிகர்கள் தங்கள் விருப்பமாக சொல்லி வந்தது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா, கமல்ஹாசன்

நடிகர் தனுஷ் தற்போது ‘ராயன்’ பட வெளியீட்டில் பிஸியாக இருக்கிறார். இதற்கடுத்து அவர் நடிப்பில் தயாராகி வரும் ‘குபேரா’ படமும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதோடு, தனுஷ் இயக்கி வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’ பட வேலைகளும் நடந்து வருகிறது. இந்தப் பணிகளை முடித்துவிட்டே முழுமூச்சாக இளையராஜா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

x