பாடகி சுசித்ராவுக்கு முன்னாள் கணவர் கொடுத்த ரியாக்‌ஷன்... வைரலாகும் வீடியோ!


"நான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால், அதுகுறித்து வெளியில் சொல்ல வெட்கப்படப் போவதில்லை” என்று பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர், நடிகர் கார்த்திக்குமார் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

நேற்று முன்தினம் பின்னணிப் பாடகி சுசித்ராவின் பேட்டி, திரையுலகை தூங்க விடாமல் செய்தது. பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் தனது பேட்டியில், ‘சுச்சி லீக்ஸ்’ விவகாரத்திற்கு காரணம் நடிகர் தனுஷ், நடிகை த்ரிஷாவும், அவரது முன்னாள் கணவர் கார்த்திக் என்றும் குற்றம் சாட்டினார். இதுமட்டுமல்லாது, ”கார்த்திக் ஓரினச்சேர்க்கையாளர். இதை திருமணம் ஆன இரண்டு ஆண்டுகளிலேயே கண்டுபிடித்து விட்டேன். ஆனால், அதை வெளியில் சொல்ல அவருக்கு தைரியமில்லை” என்று கூறினார்.

மேலும், “கார்த்திக் ஆண் நண்பர்களுடன் தான் அதிகம் பழகுவார். அடிக்கடி மும்பை சென்று விடுவார்” என்றும் சொன்னார். இந்த விஷயம் இணையவெளியில் விவாதமானது. இதுகுறித்து நடிகர் கார்த்திக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் ஓரின சேர்க்கையாளராக இருந்தால், அதற்காக வெட்கப்பட போவதில்லை. பாலியல் விஷயத்தில் நான் யாராக இருந்தாலும் அதை பெருமையாகவே கருதுகிறேன்.

அனைத்து பாலினங்களுக்கும் பெருமை மற்றும் ஆதரவுக்கு உரியவர்களே. இதில் அவமானம் எதுவும் இல்லை. நான் ஹெட்ரோசெக்‌ஷூவல் (எதிர்பாலின ஈர்ப்பு) தான். இதில் பெருமைப் பட எதுவும் இல்லை. ஆனால், எல்ஜிபிடி கம்யூனிட்டி இன்னும் கொண்டாடப்பட வேண்டும். அதற்கான நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும், தனது மனைவி, நடிகை அம்ருதாவுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து, ‘இப்போதைக்கு இது போதும்! நானும் என் மனைவியும் நெகட்டிவிட்டி பரப்பும் அனைவருக்கும் அன்பு தருகிறோம்’ என்று கூறியுள்ளார். இதைப் பார்த்தப் பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

அதேபோல, நடிகை வினோதினி கமென்டில், ‘யூடியூபில் ரூ. 2000 பணம் வாங்கிக் கொண்டு பேசுபவர்களை மதிக்க வேண்டாம். புகழுக்கு களங்கம் விளைவித்ததற்காகவும், மன அமைதியை குலைத்ததற்காகவும் வழக்குப்பதிவு செய்’ என்றும் அட்வைஸ் கொடுத்துள்ளார். இவர் சொன்னபடி, சுசித்ரா மீது கார்த்திக் வழக்குப் பதிவு செய்வாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x