தன் முன்னாள் கணவருடன் நடிகர் தனுஷ் ஒரே அறையில் இரவு முழுவதும் என்ன செய்தார் என பாடகி சுசித்ரா பகீர் கிளப்பியிருக்கிறார். இந்த விஷயம் நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
’குட்டிப் பிசாசே’, ‘என் செல்லப் பேரு ஆப்பிள்’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியவர் சுசித்ரா. வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த சுசித்ரா, பின்னர் திரைப்படங்களிலும் பாடினார். இவருக்கும் நடிகர் கார்த்திக் குமாருக்கும் கடந்த 2005ல் திருமணம் நடந்தது.
பின்பு, 2016ல் ’சுச்சி லீக்ஸ்’ என்ற பெயரில் பிரபலங்களின் பெர்சனல் வீடியோக்களும், புகைப்படங்களும் சுசித்ரா அக்கவுண்டில் இருந்து வெளியிடப்பட்டது. இந்த விஷயம் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அடுத்த வருடம் கார்த்திக் குமாரையும் விவாகரத்து செய்தார். இந்த நிலையில், கார்த்திக் ஒரீனச்சேர்க்கையாளர் என்ற விஷயத்தை நேற்று வெளியான பேட்டி ஒன்றில் சொல்லி அதிர வைத்திருக்கிறார் சுசித்ரா.
மேலும், சுச்சி லீக்ஸ் விஷயத்தை தனுஷ்- கார்த்திக் இருவரும் சேர்ந்து தான் செய்தார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், தனது முன்னாள் கணவர் கார்த்திக் ஓரினச்சேர்க்கையாளர் என்ற விஷயத்தை திருமணம் ஆன இரண்டே வருடங்களில் தான் கண்டுபிடித்து விட்டதாகவும் ஆனால், விவாகரத்து கேட்டும் 12 வருடங்களாக கார்த்திக் தரவில்லை என்றும் பகீர் கிளப்பியுள்ளார் சுசித்ரா.
மேலும் அந்தப் பேட்டியில், “தனுஷ், ஆண்ட்ரியா, கார்த்திக் எல்லாம் ஒரு குழு. அவர்கள்தான் பார்ட்டி, அடிக்கடி அவுட்டிங் என்று செல்வார்கள். ஒருநாள் கார்த்திக் குடித்துவிட்டு தனுஷூடன் ஒரே அறையில் இரவு முழுவதும் இருந்தார். அவர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரிய வேண்டும். தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து விஷயத்தில் தனுஷை விட ஐஸ்வர்யா தனிப்பட்ட முறையில் மோசம்” என அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை கிளப்பியுள்ளார் அவர்.
இதையும் வாசிக்கலாமே...
முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!
மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!
டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!
பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!