விஜய் டிவி சீரியல் நடிகை தன்னுடைய ஹல்தி ஃபங்ஷன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதில் சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிப்பவரே இந்தப் புகைப்படத்திலும் இருக்க, இதைப் பார்த்த ரசிகர்கள், ‘நிஜத்திலும் ஜோடியாகி விட்டார்களா?’ என குழம்பி போயுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’. இந்த சீரியல் இந்தியில் ஒளிபரப்பாகி வந்த ‘கர் கி கி’ என்ற தொடரின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் ஹீரோவாக ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் புகழ் திரவியம் நடிக்கிறார்.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் முடிவடைந்ததை அடுத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது. ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ போலவே அண்ணன் - தம்பியை மையப்படுத்திய சீரியலாக இது இருக்கிறது.
இதில் திரவியம் அண்ணனாகவும், அவருக்குத் தம்பியாக சுகேஷூம் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆர்த்தி சுபாஷ் நடிக்கிறார். இப்போது, ஆர்த்தி சுகேஷூடன் ஹல்தி கொண்டாட்டப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த பலரும், ‘நிஜத்திலும் இவர்கள் ஜோடியாகி விட்டார்களா?’ எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த அளவுக்கு சீரியலில் இவர்களின் ஹல்தி கொண்டாட்டத்தை பிரம்மாண்டமாக செலவு செய்து நடத்தி இருக்கிறார்கள். இதுதான் ரசிகர்களின் குழப்பத்திற்குக் காரணம். பிறகுதான் இது சீரியலுக்காக ஷூட் செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகி இருக்கிறது. ’இப்போதெல்லாம், டிஆர்பிக்காக படத்திற்கு இணையாக சீரியலிலும் தாராளமாக செலவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்’ என ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!