நடிகை நமீதா இன்று தனது பிறந்தநாளை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நமீதா. இப்போது குடும்பம், குழந்தைகள் என செட்டிலாகி விட்டவர் அரசியல் களத்தில் பிஸியாக உள்ளார். பாஜகவில் நட்சத்திர பேச்சாளராக மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வந்த நடிகை நமீதா, இன்று தனது 43வது பிறந்த நாளுக்காக சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்தி, அன்னதானம் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், இனிமேல் வருடாவருடம் தனது பிறந்தநாளுக்கும் தன் குழந்தைகள் பிறந்தநாளுக்கும் கோயிலில் வழிபாடு நடத்தி அன்னதானம் செய்ய இருப்பதாகத் தெரிவித்தார்.
அப்போது அவரிடம் கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா விவாகரம் குறித்து ‘ஒரு பெண்ணாக பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தை எப்படி பார்க்கறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்தான கேள்வியை எதிர்கொண்ட நமீதா முதலில் புரியாமல் முழித்தார். தான் பிரச்சார பிஸியில் இருப்பதாக சிரித்து மழுப்பினார். பின்பு, அவரிடம் அந்தக் கேள்வி திரும்ப கேட்கப்படவே நமீதாவுக்கு பின்னால் இருந்த ஒருவர், ‘தப்பு என்றால் தப்புதான்’ என்று சொல்லும்படி சொன்னார்.
அதையே பதிலாக சொன்ன நமீதா, “நீதிமன்றம் இதில் முடிவு எடுக்கும். என்னிடம் இந்தக் கேள்வியை கேட்காதீர்கள். பிறந்தநாளுக்காக வந்திருக்கிறேன். அரசியல் வேண்டாம்” என்று கூறினார்.
”இவர் பாஜகவின் நட்சத்திர பேச்சாளர், பிரஜ்வல் ரேவண்ணா என்றால் யார் என்று கேட்பார் போல... நாடு வெளங்கிடும்” என்று தலையில் அடித்தப்படியே அங்கிருந்த செய்தியாளர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
பத்ம விருது பெற்றவர்களுக்கு ராஜ உபசரிப்பு... இரவு விருந்தளித்த அமைச்சர் அமித் ஷா!
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!