அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!


நடிகர் விஜய்

நடிகர் விஜய் தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டிற்குத் தேதி குறித்திருக்கிறார். இந்த விஷயம் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என கட்சி துவங்கி, 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கப் போவதாகவும் உறுதிப்படுத்தினார் விஜய். நேரடியாகவும், டிஜிட்டலாகவும் தனது கட்சிக்கு தொண்டர்களை சேர்க்க ஆரம்பித்த நிலையில், மக்களவைத் தேர்தல் வர, சைலன்ட்டாக இருந்தது தவெக.

இப்போது, தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில், ஜூனில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டவுடன் மீண்டும் கட்சிப் பணிகளை விறுவிறுப்பாக தொடங்க இருக்கின்றனர். அந்த வகையில், முன்பே வெளியான தகவலின்படி தவெகவின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளனர்.

நடிகர் விஜயின் பிறந்தநாள் ஜூன் மாதம் 22-ம் தேதி வருகிறது. அதற்கு முன்பே தேர்தல் லெக்‌ஷன் முடிவும் அறிவிக்கப்பட்டு விடும் என்பதால் தன்னுடைய பிறந்தநாளின் போதே சென்டிமென்ட்டாக கட்சியின் முதல் மாநாட்டினை மதுரையில் நடத்த முடிவு செய்திருக்கிறார் விஜய். இதுகுறித்தான அறிவிப்பும் சீக்கிரம் வரும் என்கிறார்கள்.

பல அரசியல் தலைவர்களுக்கு அடித்தளமிட்டுக் கொடுத்த மதுரை மாவட்டம் தன்னுடைய அரசியல் பயணத்திற்கும் தொடக்கமாக இருக்க வேண்டும் என்று கருதியிருக்கிறார் விஜய். படவிழாக்களில் விஜயின் குட்டி ஸ்டோரிக்கே அவரது ரசிகர்கள் தவமாய் காத்திருப்பார்கள்.

இப்போது அரசியல் களத்தில் தங்கள் தலைவரின் முதல் மாநாடு எப்படி இருக்கப் போகிறது, அதில் அவர் என்ன பேசப் போகிறார் என்று தங்கள் ஆவலை இப்போதே இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

x