சோகம்... தியாகராஜ பாகவதரின் மகள் காலமானார்!


தியாகராஜ பாகவதரின் மகள் சுசிலா

பழம்பெரும் நடிகரும், பாடகருமான தியாகராஜ பாகவதரின் மகள் சுசிலா காலமானார். இந்த செய்தி திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் ஏழிசை மன்னராகத் திகழ்ந்தவர், முத்துவேல் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜன் என்னும் எம்.கே.தியாகராஜ பாகவதர். தமிழ் சினிமாவில் பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் சூப்பர் ஸ்டார் நடிகராக இவர் வலம் வந்தார். 1934-ம் ஆண்டு ‘பவளக்கொடி’ என்ற படத்தில் கதாநாயகனாக இவர் அறிமுகமானார். இவர் நடித்த ‘ஹரிதாஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் அந்த காலத்தில் சுமார் 3 ஆண்டுகள் வரை ஓடியது.

எம்.கே.தியாகராஜ பாகவதர்

இந்த நிலையில், இவருடைய மகள் சுசிலா (89) முதுமை காரணமாக, நேற்று (ஜனவரி 2) அதிகாலை 3 மணியளவில், சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் காலமானார். தியாகராஜ பாகவதரின் மகன் ரவீந்திரனும் மகள் சரோஜாவும் இயற்கை எய்திவிட்ட நிலையில், தற்போது இன்னொரு மகளான சுசிலாவும் இறந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

x