பாலிவுட்டின் பிரபல வில்லன் நடிகரான ஜான் ஆபிரகாம் கோடிகளைக் கொட்டி மும்பையில் பங்களா வாங்கியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் பிரபல வில்லன் நடிகராக வலம் வருபவர் ஜான் ஆபிரகாம். நடிகர் மட்டுமல்லாது இவர் தயாரிப்பாளரும் கூட. பாலிவுட் நடிகை பிபாஷூ பாசுவும் ஜானும் டேட்டிங் செய்து வந்த நிலையில் பின்பு பிரேக்கப் செய்தது இந்த ஜோடி. அடுத்ததாக 2014ம் ஆண்டு பிரியா ரூஞ்சல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்த ஜோடிக்கும் இன்னும் குழந்தைகள் இல்லை. தற்போது நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வரும் ஜான் கடந்த வருடம் ஷாருக்கான், தீபிகா நடிப்பில் வெளியான ‘பதான்’ படத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார். இந்தப் படம் ஆயிரம் கோடி வசூலைத் தொட்ட நிலையில், இந்தப் படத்திற்காக மட்டும் ஜானுக்கு ரூ.30 கோடி சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், தனது 51வது வயதில் மும்பையில் சுமார் 13,138 சதுர அடியில் பிரம்மாண்டமான பங்களாவை வாங்கியுள்ளார் ஜான். இரண்டு மாடிகள் கொண்ட பிரம்மாண்ட பங்களா பிரவீன் நாத்தலால் ஷா என்பவருக்கு சொந்தமாக இருந்திருக்கிறது. கடந்த டிசம்பர் 27ம் தேதி தான் ஜான் ஆபிரகாம் பெயருக்கு மாற்றி தரப்பட்டுள்ளது. இந்த சொகுசு பங்களாவின் விலை மட்டும் 75 கோடி ரூபாயாம். புத்தாண்டை முன்னிட்டு தனது மனைவிக்கு இந்த பங்களாவை பரிசு கொடுத்து மகிழ்வித்திருக்கிறாராம் ஜான்.
இதையும் வாசிக்கலாமே...
பிரதமர் விழாவில் சர்ச்சையை கிளப்பிய முதல்வர்... கொந்தளிக்கும் பாஜக!
அடம்பிடிக்கும் காங்கிரஸ்... கறார் காட்டும் திமுக... கூட்டணியில் திடீர் சிக்கல்!
இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பன் கொலை... 3 மாதம் கழித்து கொலையாளி கைது!