நடிகை சாய் தம்ஹங்கரின் சாக்லேட் பிரவுன் கவுன்....ஹாட் ஸ்டில்களால் ரசிகர்கள் சரண்!


நடிகை சாய் தம்ஹங்கர்

சாக்லேட் பிரவுன் நிற கவுனில் நிர்வாண ஒப்பனையுடன் தனது தோற்றத்தைக் காட்டும் புதிய லுக் புகைப்படங்களை நடிகை சாய் தம்ஹங்கர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், சாங்கிலியில் பிறந்தவர் நடிகை சாய் தம்ஹங்கர்(38). இவர் மராத்தி, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் நன்கு அறியப்பட்ட சாய் தம்ஹங்கர், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார்.

நடிகை சாய் தம்ஹங்கர்

மாநில அளவிலான கபடி வீராங்கனையாக திகழ்ந்த சாய், கராத்தேவில் ஆரஞ்ச் பெல்ட் பெற்றவர். தனது தாய் இயக்கிய நாடகம் மூலம் திரையுலகிற்கு வந்த சாய், திருமணமாகி விவகாரத்தானவர். தற்போது பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

அவர் தற்போது வெளியிட்டுள்ள சூடான புகைப்படங்கள் ரசிகர்களைப் படபடக்க வைத்துள்ளது. அந்த புகைப்படங்களில் சாய், சாக்லேட் பிரவுன் நிறத்தில் உள்ள கவுன் அணிந்துள்ளார். உடலை முழுவதுமாக மறைத்திருந்தாலும், அவர் உடை அணிந்துள்ளாரா என்று சந்தேகம் அடையும் வகையில் அவரின் உடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடிகை சாய் தம்ஹங்கரின் ஸ்டில்ஸ்

நீண்ட தங்க காதணிகள் மற்றும் அதற்குப் பொருத்தமான வளையல்களை அவர் தேர்வு செய்து அணிந்துள்ளார். அவர் அளித்துள்ள வித, விதமான போஸ்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கொந்தளிக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் சாய் தம்ஹரின் ஹாட் லுக் புகைப்படங்களுக்கு அவரது ரசிகர்கள் ஹார்ட்டின்களை விட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x