விஜயகாந்துக்கு அஞ்சலி; நன்றி மறந்த வடிவேலு... ப்ளூசட்டை மாறன் கடும் விமர்சனம்!


விஜயகாந்த் செய்த நல்ல விஷயங்களை நடிகர் வடிவேலு மறந்து விட்டதாக ப்ளூ சட்டை மாறன் விளாசியுள்ளார்.

“நடிகர் விஜயகாந்த் தயவால் வளர்ந்த வடிவேலு அவரை மறந்து விட்டார்” என சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் கொந்தளித்துள்ளார். இதுமட்டுமல்லாது, வடிவேலு பலருடைய மறைவுக்கும் அஞ்சலி செலுத்தச் செல்லாமல் இருக்கிறார் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார் மாறன்.

” 'சின்னக்கவுண்டர்’, ’தவசி’, ’எங்கள் அண்ணா’, ’நரசிம்மா’ எனப் பல படங்களில் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளார் வடிவேலு. இந்த ஜோடியின் காமெடி பல படங்களில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அரசியல் ரீதியாக இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விஜயகாந்துக்கு எதிராக வடிவேலு தேர்தல் பிரச்சாரம் செய்தார். இருந்த போதும் விஜயகாந்த் அவருக்கு எதிர்வினை ஆற்றவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

இது தொடர்பாக மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘’சின்னக்கவுண்டர்’ படத்தில் நடிக்கும்போது உடுத்திக்கொள்ள நல்ல துணிகூட இல்லாமல் இருந்த வடிவேலுவுக்கு ஐந்து செட் துணிகளை வாங்கித் தந்தார் கேப்டன். தனது நெருங்கிய நண்பர்கள், உடன் நடித்தவர்கள், ஆரம்பகாலத்தில் உதவி செய்தவர்கள் என எவரது இறப்பிற்கும் செல்லாதவர் வடிவேலு.

உதாரணம், விவேக், மயில்சாமி, மனோபாலா, போண்டாமணி, விஜயகாந்த் மற்றும் பலர். தனக்குத் தெரிந்த திரையுலகத்தினர் சென்னையில் இறந்த தகவல் வந்தால் உடனே, மதுரைக்கு விமான டிக்கட் போட்டு ஓடிவிடுவதும், வேறு ஊர்களில் நடிகர்கள் இறந்தால் சென்னைக்கு வந்துவிடுவதும் வடிவேலுவின் யுக்தியாம்.

பல படங்களில் உடன் பணியாற்றிய அல்வா வாசு மதுரைக்காரராம். வடிவேலு வீட்டிற்கு அருகேதான் அவரது வீடாம். அவர் இறந்த தகவல் வந்ததும் உடனே சென்னைக்கு வந்து விட்டாராம் வடிவேலு” என வடிவேலுவை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...


அதிகாலையிலேயே அஞ்சலி செலுத்த குவிந்த தொண்டர்கள்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

x