நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு?! வெளியே போகச் சொல்லி தொண்டர்கள் எதிர்ப்பு!


அஞ்சலி செலுத்திய விஜய்

நேற்று இரவு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் சென்றிருந்த போது, அவருக்கு எதிராக ரசிகர்கள், “வெளியே போ, வெளியே போ” என்று முழக்கம் எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உடல்நலக் குறைவு காரணமாக விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவருடைய உடல் அஞ்சலிக்காக நேற்று காலை தேமுதிக அலுவலகம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து திரைப்பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் திரண்டு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நேற்று இரவு நடிகர் விஜய், விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தேமுதிக அலுவலகம் வந்தார். அப்போது அங்கு விஜய் கூட்ட நெரிசலில் சிக்கினார். இதையடுத்து போலீஸார், அவரைப் பத்திரமாக மீட்டு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த அழைத்துச் சென்றனர். விஜயகாந்த் உடலைப் பார்த்து நடிகர் விஜய் கலங்கி நின்ற காட்சி காண்போரை கலங்கச் செய்தது.

விஜயகாந்த் உடல்

பின்னர், பிரேமலதா மற்றும் விஜயகாந்தின் மகன்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து விஜய் புறப்பட்டார். நடிகர் விஜய் கிளம்பும்போது அங்கிருந்த விஜயகாந்த் ரசிகர்கள், “வெளியே போ, வெளியே போ” என விஜயைப் பார்த்து கோஷமிட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ரசிகர்கள் சிலர் நடிகர் விஜய் மீது செருப்பு வீச முயற்சித்த சம்பவமும் நிகழ்ந்தது. விஜய்க்கு பின்புறமாக செருப்பு வீசப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி, வைரலானது.

நடிகர் விஜயை திரையுலகில் ஆரம்பகாலத்தில் தன் படங்களில் நடிக்க வைத்து பிரபலமாக்கியதே விஜயகாந்த் தான். ஆனால், அவர் உடல்நிலை குன்றியிருந்தபோது ஒருமுறைகூட அவரைப் விஜய் பார்க்க வரவில்லை. அந்த அதிருப்தியால் தான், ரசிகர்கள் கோஷமிட்டு, தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


அதிகாலையிலேயே அஞ்சலி செலுத்த குவிந்த தொண்டர்கள்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

x