அடேயப்பா... பிக் பாஸ் இந்த சீசனில் கமல்ஹாசனின் சம்பளம் 130 கோடி!


’பிக் பாஸ்’ கமல்

பிக் பாஸ் தமிழ் ஏழாவது சீசனில் நடிகர் கமல்ஹாசனின் சம்பளம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் ஏழாவது சீசன் அடுத்து வர இருக்கும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. தமிழில் இதுவரை வெளியான சீசன்களில் 24 மணி நேர ஒளிபரப்பு, ஓடிடி ஒளிபரப்பு ஆகியவற்றை புதுமையாக முயற்சித்து இருக்கிறது பிக் பாஸ் டீம். அந்த வரிசையில், இந்த ஏழாவது சீசனில் முதல் முறையாக இரண்டு வீடு வரப் போகிறது என அறிவித்துள்ளார்கள்.

அந்த வகையில், இந்த இரண்டு பிக் பாஸ் வீடுகளிலும் போட்டியாளர்கள் தங்க வைக்கப்படுவார்கள். இந்த சீசனில் நடிகர்கள் ரவீனா, பப்லு பிரித்விராஜ், அப்பாஸ், ஜோவிகா, மூன்நிலா, அனன்யா, விஜே அர்ச்சனா, ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குமரன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகிறது.

கமல்ஹாசன்

மேலும் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு தொகுப்பாளராக நடிகர் கமலின் காண்ட்ராக்ட் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சீசனுக்கு மட்டும் அவர் கிட்டத்தட்ட 130 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

கடந்த சீசனில் இவரது சம்பளம் 75 கோடிதான். ’விக்ரம்’ பட வெற்றி மேலும் கமலைத் தவிர இந்த நிகழ்ச்சியை யாரும் சிறப்பாக கொண்டு போக முடியாது போன்ற காரணங்களால் இரண்டு மடங்கு சம்பளத்தை இந்த சீசனுக்கு கமல் அதிகப்படுத்தியுள்ளார் என்கின்றனர்.

x