உயிரைப் பறித்த சாலை விபத்து... ரசிகர் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா!


நடிகர் சூர்யா...

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தி உள்ளார்.

சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கு வயது 24. கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி இவர் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார். இவர் நடிகர் சூர்யாவின் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்.

அரவிந்த் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சூர்யா

ரசிகரின் வீட்டில் நடிகர் சூர்யா

இவரின் எதிர்பாராத மரணம் அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது ரசிகரின் மரணத்தைக் கேள்விப்பட்ட நடிகர் சூர்யா எண்ணூரில் உள்ள அவரின் வீட்டுக்கு நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்திவிட்டு, அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

x