இமானுக்குப் பதில் சொன்ன சிவகார்த்திகேயன்...சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!


நடிகர் சிவகார்த்திகேயன்

இசையமைப்பாளர் இமான் சர்ச்சைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பதில் கொடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் - இமான்

இசையமைப்பாளர் இமான் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், இதை அவரிடம் எதிர்பார்க்கவில்லை என்றும், இனிமேல் அவருடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பே இல்லை என்றும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இமானின் முன்னாள் மனைவி மோனிகாவும், சிவகார்த்திகேயன் தங்கள் குடும்பத்தைச் சேர்த்து வைக்க முயற்சித்ததையே இமான் அவ்வாறு கூறியுள்ளார் எனப் பேட்டி கொடுத்தார்.

சிவகார்த்திகேயன்

ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விஷயம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை பொதுவெளியில் எங்கும் பேசாமல் இருந்தார். இந்த நிலையில், பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாகவுள்ள அவரது ‘அயலான்’ திரைப்படத்திற்கான இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் இமானுக்குப் பதில் கொடுப்பாரா என எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், “என்னை சில பேர் சூப்பர் என சொல்வார்கள். சிலர் பேர் திட்டுவார்கள். நான் இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. என்னை விரும்பாதவர்களிடம் போய் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்னைப் பிடித்தவர்களுக்காக நான் எப்போதும் போல என் பாதையில் ஓடிக்கொண்டிருக்க போகிறேன்" என பேசியுள்ளார். இதனால், இமானை நேரடியாகத் திட்டாமல், மறைமுகமாக பதில் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இமான்.

அத்துடன், பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் ‘லால் சலாம்’, ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்கள் வெற்றிப் பெறத் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

x