நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். இதற்கான காரணமும் தற்போது தெரிய வந்துள்ளது.
’ஜெயிலர்’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘லால் சலாம்’ படம் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது. இதற்கடுத்து அவர் ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் எனப் பலரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் செம ஸ்டைலிஷாக இருந்தார். இதன் படப்பிடிப்பு முதலில் கன்னியாகுமரியில் தொடங்கியது. அதன்பிறகு கேரளா, மும்பை, சென்னை ஆகிய பகுதிகளில் நடந்தது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் அவர் வந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில் தென் தமிழக வெள்ள பாதிப்புகளுக்கு ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. ரஜினிகாந்த் நேரடியாக வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிடுகிறாரா என ரசிகர்கள் சந்தேகம் எழுப்பிய நிலையில், ’வேட்டையன்’ படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பிற்காகவே அவர் வந்துள்ளார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...