பிரபுதேவா பாட்டுக்கு நடனமாடி அசத்திய ராஜமெளலி...வைரலாகும் வீடியோ!


ராஜமெளலி

தெலுங்கு சினிமாவின் மாஸ் இயக்குநர்களில் ஒருவரான ராஜமெளலி, பிரபுதேவாவின் ஹிட் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வைரலாக்கி வருகின்றனர்.

’பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்’ எனத் தனது அடுத்தடுத்தப் படங்கள் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பி பார்த்த வைத்த இயக்குநர்களில் ராஜமெளலி முக்கியமானவர். குறிப்பாக ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை உலக அரங்கில் எடுத்துச் சென்றவர். இந்தப் படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபுதேவாவின் ‘காதலன்’ படத்தில் இடம்பெற்ற ‘காதலிக்கும் பெண்னின் உள்ளம்...’ பாட்டிற்கு டான்ஸ் கிளாஸில் உற்சாகமாக நடனம் ஆடியுள்ளார் ராஜமெளலி.

இயக்குநர் ராஜமெளலி, நடிகர் மகேஷ்பாபு

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர். ’ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை அடுத்து இப்போது மகேஷ் பாபுவுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார் ராஜமெளலி.

இதற்கான அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. இதற்கான திரைக்கதைப் பணியில் பிஸியாக இருப்பவர் இதற்கிடையில் நடனமாடி ரிலாக்ஸ் செய்திருக்கிறார். மகேஷ் பாபுவுடனான படம் முடித்துவிட்டு அடுத்து ‘ஆர்.ஆர்.ஆர்.2’ ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னை போலீஸாருக்கு குட்நியூஸ்... இன்று முதல் தபால் வாக்குகளைச் செலுத்தலாம்!

x