நடிகை சமந்தா, புஷ்பா படத்தின் பாடல் காட்சிக்காக வாங்கிய சம்பளம் பேசுபொருளானதைப் போல, ‘புஷ்பா2’ படத்தில் இடம்பெறும் ஆறு நிமிட காட்சியை உருவாக்க மட்டும் கிட்டத்தட்ட ரூ. 60 கோடி செலவழித்து வாயைப் பிளக்க வைத்திருக்கிறது படக்குழு.
’முந்தைய பாகத்தை விட காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம்’ என ‘புஷ்பா2’ பற்றி சொல்லி இருந்தது படக்குழு. புஷ்பா படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு தேசிய விருதுகள் கிடைத்ததும் ’புஷ்பா2’ மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்க ஆரம்பித்தது. படம் வெளியாவதற்கு முன்பே ‘புஷ்பா2’ படத்திற்கான பிசினஸ் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகரித்துள்ளதாக எல்லாம் சொல்லப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அல்லு அர்ஜூனின் பிறந்தநாளையொட்டி ‘புஷ்பா 2 ஜாதரா’ என படத்தின் டீசர் வெளியானது. புடவை அணிந்து, காலில் சலங்கை, கையில் சங்குடன் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார் அல்லு அர்ஜூன். மாஸான சண்டைக்காட்சிக்கான களம் எனவும் டீசரிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.
ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் தெலங்கானா மாநிலத்தில் குவியும் சம்மக்கா சாரலம்மா ஜாதராவின் 4 நாட்கள் திருவிழா காட்சியை இயக்குநர் படமாக்கி இருந்தார்.
படத்தில் இடம்பெறும் இந்த ஆறு நிமிட காட்சியை படமாக்க தயாரிப்பாளர்கள் சுமார் 60 கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’புஷ்பா 2’ படத்தின் பட்ஜெட் ரூ. 500 கோடி என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் உலகளாவிய இசை உரிமையும், இந்தி சாட்டிலைட் உரிமையும் டி-சீரிஸ் நிறுவனத்திற்கு ஏற்கனவே ரூ.60 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு சாட்டிலைட் உரிமையை ஸ்டார் மா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ரூ.100 கோடி ரூபாய் கொடுத்து டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
சென்னை போலீஸாருக்கு குட்நியூஸ்... இன்று முதல் தபால் வாக்குகளைச் செலுத்தலாம்!
தமிழகத்தை 2 நாட்கள் வலம் வருகிறார் அமித் ஷா... நாளை முதல் ரோடு ஷோ, பிரச்சாரம்!