நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் குறித்து எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்களை படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், படத்திற்காக டூப் எதுவும் இல்லாமல் அஜித் ரிஸ்க் எடுத்து இந்த ஸ்டண்ட் காட்சிகளை செய்திருக்கிறார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக தொடங்கி இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் படத்தில் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கின்றன. நடிகர் அஜித் ஆரவ்வுடன் கார் ஒன்றில் பயணித்து வருகிறார். வழக்கமான தனது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஆக்ரோஷமாக பயணிக்கும் இவர்களது கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகிறது. கார் கவிழ்ந்து விப்பத்துக்குள்ளாகி இருக்க, டூப் இல்லாமல் நடித்து கார் விபத்தில் சிக்கிய அஜித் மற்றும் ஆரவ் இருவரையும் காப்பாற்ற காட்சி முடிந்ததும் படக்குழுவினர் விரைகின்றனர்.
இந்த எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்களைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ’என்னதான் நடிப்பிற்காக அர்ப்பணிப்புடன் இருந்தாலும், டூப் இல்லாமல் நடித்து இப்படி ரிஸ்க் எடுக்க வேண்டுமா? பாதுகாப்புடன் இருங்கள் அஜித் சார்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.
’விடாமுயற்சி’ படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அஜித் சென்றபோது, அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அறுவை சிகிச்சை செய்தனர். பின்பு நலமுடன் வீடு திரும்பிய அஜித் பைக் பயணத்திலும் ஈடுபட்டார்.
இப்போது ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது. அதற்கு முன்பே, படத்தின் எக்ஸ்க்ளூசிவான வீடியோ அப்டேட் கிடைத்திருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!