மனைவி டார்ச்சர் தாங்கல... விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மாஸ்டர் செஃப் பிரபலம்!


குணால் கபூர்

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செஃப் குணால் கபூர், தன்னுடைய மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை என நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

குணால் கபூர்

நடன நிகழ்ச்சிகளைப் போலவே, சமையல் ரியாலிட்டி நிகழ்சிகளுக்கும் சின்னத்திரையில் நிறைய ரசிகர்கள் உண்டு. அப்படி உலகம் முழுவதும் புகழ்பெற்ற ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி இந்தியாவிலும் நுழைந்தது. வட இந்தியாவில் ஹிட்டடித்த நிகழ்ச்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழிலும் நுழைந்தது. இதில் நடிகர் விஜய்சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆனால், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியது இந்த நிகழ்ச்சி. இதனால், இதன் இரண்டாவது சீசன் வரவில்லை.

வட இந்தியாவில் இந்த மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ரசிகர்களிடையே புகழ் பெற்ற குணால் கபூர். இவர், தனது மனைவி டார்ச்சர் தாங்க முடியவில்லை எனச் சொல்லி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விவாகரத்துக் கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

குணால் கபூர்

மனைவி மீதான தன்னுடைய புகாரில், தனது பெற்றோரையும் தன்னையும் அவமானப்படுத்தும் படியாக மனைவி நடந்து கொள்கிறார் எனக் கூறியுள்ளார். இதற்கு பதில் வாதமாக, குணால் கபூரும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் ஆனால், அவருடன் தான் சேர்ந்து வாழவே விரும்புதாகவும் அவரது மனைவி கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை குணால் கபூருக்கு ஆதரவாக விவாகரத்து கொடுத்துள்ளது. விவாகரத்து செய்ய மறுத்த குடும்ப நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குணால் கபூரின் மேல்முறையீட்டை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. கடந்த 2008ஆம் ஆண்டு இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்று பின்பு 2010ஆம் ஆண்டில் ஆண் குழந்தையும் பிறந்தது. இவர்களது விவாகரத்து பாலிவுட்டில் பேசு பொருளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x