நடிகர் சிரஞ்சீவியுடன் தெலுங்கில் ‘விஸ்வாம்பரா’ படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. இதற்கடுத்து தெலுங்கில் இன்னொரு டாப் ஹீரோவுக்கு த்ரிஷா ஜோடியாகிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
’96’ படத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷாவுக்கு சினிமாவில் ஏறுமுகம்தான். குறிப்பாக, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தால் அவரது கிராஃப் இன்னும் மேலே சென்றது. அதன் பிறகு, விஜயுடன் ‘லியோ’, அஜித்துடன் ‘விடாமுயற்சி’, மலையாளத்தில் மோகன்லாலுடன் ’ராம்’, கமல்ஹாசனுடன் ‘தக் லைஃப்’, தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் ‘விஸ்வாம்பரா’ என தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி கதாநாயகர்களுடன் மீண்டும் ஜோடி போட்டிருக்கிறார் த்ரிஷா.
இந்த வரிசையில் அடுத்து அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
அதுவும் ‘ஜவான்’ படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜூனை வைத்து அட்லி இயக்க இருப்பதாக சொல்லப்படும் புதிய படத்தில்தான் கதாநாயகி ஆகிறாராம் த்ரிஷா. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், கிட்டத்தட்ட அது உறுதியாகி விட்டது என்கிறார்கள். அல்லு அர்ஜூன் பிறந்தநாளான ஏப்ரல் 8 அன்று இதைப் படக்குழு உறுதி செய்யுமா அல்லது வரும் நாட்களில் அறிவிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இப்படி முன்னணி நடிகர்களுடன் தனக்கு குவியும் வாய்ப்புகளால் தனது சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தி விட்டார் த்ரிஷா எனவும் கிசுகிசுக்கிறது கோலிவுட். எப்படியானாலும் ஹிட் படத்தில் தங்களுக்குப் பிடித்த நாயகர்களுடன் த்ரிஷா ஜோடி போடுவது தங்களுக்கு மகிழ்ச்சி என வாழ்த்துக் கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
இதையும் வாசிக்கலாமே...
நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!
பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!
அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!
கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!
நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!