கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதியை ஒப்பிட முடியாது: நடிகை ரச்சிதா!


பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதியை ஒப்பிட முடியாது என நடிகை ரச்சிதா தெரிவித்து இருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. கடந்த ஏழு சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் முன்பே ஒப்பந்தம் செய்து கொண்ட திரைப்படங்கள் காரணமாக இந்த எட்டாவது சீசனை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகியிருக்கிறார். இதனால், விஜய்சேதுபதி எட்டாவது சீசனை தொகுத்து வழங்குகிறார். நடிகர்கள் செந்தில், ரஞ்சித், தீபக் உள்ளிட்டப் பலரது பெயர்கள் இந்த சீசனில் போட்டியாளர்களாக அடிபடுகிறது. விஜய்சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதைப் பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான ரச்சிதா விஜய்சேதுபதி பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார். “நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகை. அவர் சிறந்த நடிகர். அனுபவம் அறிவுக் கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். எந்த டாப்பிக் எடுத்தாலும் அதில் சுவாரஸ்யாமாக பேசி பார்வையாளர்களை கவர்வார். விஜய்சேதுபதியும் திறமையானவர், இனிமையானவர். ஆனால், நிகழ்ச்சியை கையாள்வதிலும் போட்டியாளர்களுடன் பேசுவதிலும் அவரை கமலுடன் ஒப்பிட முடியாது” எனக் கூறியிருக்கிறார்.

x