மகளுக்காக பிரிந்த தனது மனைவியுடன் மீண்டும் இணைந்துள்ளார் நவாசுதீன் சித்திக். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகவே இத்தனை நாட்கள் தங்களுக்குள் பிரச்சினை வந்ததாகவும், இனி அது இருக்காது எனவும் கூறியுள்ளார் நவாசுதீன்.
பாலிவுட்டில் ‘சைந்தவ்’, ‘சீரியஸ் மென்’ உள்ளிட்டப் பல படங்களில் மிரட்டலான நடிப்பைக் கொடுத்தவர் நவாசுதீன் சித்திக். தமிழில் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்திருப்பார். இவர் அலியா என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். இந்த ஜோடிக்கு மகள், மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நவாசுதீனிடம் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு அலியா விவாகரத்து கோரினார்.
குழந்தைகளை தன்னுடன் வைத்துக் கொண்டவர், அவர்களின் கல்விக்காகவும் துபாய் சென்றார். இந்த நிலையில் பல சச்சரவுகளுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்திருக்கிறது. இதுகுறித்து அலியா பேசும்போது, “எங்கள் குழந்தைகளின் நன்மைக்காக நாங்கள் மீண்டும் இணைய முடிவு செய்திருக்கிறோம். எங்களிடையே நடந்த பல பிரச்சினைகளுக்குக் காரணம் மூன்றாவது நபர்களின் தலையீடுதான்.
அது இனிமேல் இருக்காது. எங்களுடன் இருந்த நல்ல நினைவுகளை மனதில் வைத்து திருமண வாழ்வைத் தொடர்வோம். மகள் சோரா மீது நவாசுதீன் அதீத அன்பு வைத்திருக்கிறார். அப்பாவைப் பிரிந்து அவளாலும் இருக்க முடியவில்லை. அதனால், இனிமேல் நாங்கள் சண்டை போட மாட்டோம்” எனக் கூறியுள்ளார்.
இதுமட்டுமல்லாது, தங்களது 14ஆவது திருமண நாளையும் சமீபத்தில் துபாயில் கொண்டாடி இருக்கிறது இந்த ஜோடி. மீண்டும் இணைந்த நவாசுதீன் - அலியாவுக்கு தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
இதையும் வாசிக்கலாமே...
வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!