கங்கனா வழியில் கீர்த்தி சனோன்... அரசியல் பிரவேசம் குறித்து விளக்கம்!


கங்கனா- கீர்த்தி சனோன்

பாஜகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வந்த நடிகை கங்கனா ரனாவத் இந்தத் தேர்தலில் பாஜக வேட்பாளராக இமாச்சலில் போட்டியிடுகிறார். இவரைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சனோனும் அரசியலில் குதிப்பதாக செய்திகள் வெளியானது. தற்போது அதற்கு விளக்கமளித்துள்ளார் கீர்த்தி.

அரசியல் கட்சிகளில் சினிமா பிரபலங்கள் இணைவது இப்போது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் இந்த மக்களவைத் தேர்தலில் அதிக அளவிலான நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது பாஜக. இதில் நடிகை கங்கனாவும் ஒருவர். அவர், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டியா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை அடுத்து நடிகை கீர்த்தி சனோனும் அரசியலில் குதிக்க இருக்கிறார் என்ற செய்தி வலம் வந்தது.

இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெளிவுபடுத்தி இருக்கும் கீர்த்தி, “எந்த ஒரு விஷயம் செய்வதற்கும் ஆர்வம் தேவை. அது நம் உள்ளிருந்து வர வேண்டும். அந்த ஆர்வம் எனக்கு உள்ளிருந்து வரும் வரையிலும் நான் இதைச் செய்வேன் அல்லது அதைச் செய்வேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை.

கீர்த்தி சனோன்

என்றாவது ஒருநாள் அரசியல் தளம் மூலம் மக்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும் என்று தோன்றினால் நிச்சயம் வருவேன்” எனக் கூறியுள்ளார்.

’மிமி’ படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சனோனுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு தேசிய விருது கிடைத்தது. ’ஹவுஸ்ஃபுல்4’, ’ஆதிபுருஷ்’, கத்ரீனாவுடன் ‘க்ரூ’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் கீர்த்தி சனோன்.

இதையும் வாசிக்கலாமே...

x