கண்ணீர் விட்டு கதறியழுத சமந்தா... காரணம் இதுதான்!


நடிகை சமந்தா

ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா, திடீரென கண்கலங்கி அழுதுள்ளார். அதற்கான காரணத்தையும் சமந்தா கூறியுள்ளார்.

'எம்டியு ஹஸ்டில் சீசன் 3' என்ற ரியாலிட்டி ஷோ எம் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியின் நடுவராக நடிகை சமந்தா பங்கேற்றுள்ளார். பாப் பாடகர் பாட்ஷா நிகழ்ச்சியில் சமந்தாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் சமந்தாவின் உடை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியின் நடுவே சமந்தா கதறியழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் பாடகர் கிராவிட்டி, ‘ஜலாலுதீன்’ எனும் பாடலை பாடினார். அந்தப் பாடலை கேட்டவுடன் கண்கலங்கி அழுதுவிட்டார் சமந்தா. இந்த பாடலை கேட்டு சமந்தா ஏன் அழுதார் என பலருக்கும் கேள்வி எழுந்தது. அதற்கு காரணம் மையோசிடிஸ் நோயால் சமந்தா பாதிக்கப்பட்டு இருந்த போது அவருக்கு ஊக்கம் கொடுத்த பாடல் இதுதானாம். இதனால் தான் இந்த பாடலை கேட்டவுடன் அந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் திடீரென கண்கலங்கி அழுதுவிட்டார் சமந்தா.

இதையும் வாசிக்கலாமே...

x