சென்னை: நடிகர் அஜித் கார் ரேஸ் பந்தயத்தில் மீண்டும் களமிறங்குகிறார் என கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கார், பைக் மற்றும் விமானம் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித். பைக்கிலேயே இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு பைக்கிலேயே பயணம் செய்திருக்கிறார். இதுமட்டுமல்லாது, ‘ஏகே மோட்டோ ரைட்’ என்ற பெயரில் பைக்கில் பயணம் செய்ய விரும்புவர்களுக்கு கம்பெனி ஒன்றும் ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில், அஜித் மீண்டும் கார் ரேஸில் களமிறங்குகிறார் என கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில், ‘2025ஆம் ஆண்டு நடைபெறும் ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப்பில் எனது நண்பர் அஜித்குமார் கலந்து கொள்வதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். இதன் மூலம் அவர் ரேஸிங்கில் மீண்டும் கலந்து கொள்கிறார். அவர் உண்மையிலேயே ஜாம்பவான். அவருக்கு இதுபோன்ற பந்தயத்தில் அதிக அனுபவம் இல்லை மற்றும் அவர் இந்தப் பந்தயத்தில் தாமதமாகத் தொடங்கினார் என்றாலும், அவர் எத்தனை பேருக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். அவர் 2010-ல் FIA F2 பந்தயத்தில் ஓட்டியது எனக்கு நினைவிருக்கிறது. அவரது திறமைகளுக்கு எல்லையே இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஒரு அற்புதமான மனிதர். உங்களுக்கு வாழ்த்துகள்!’ எனக் கூறியுள்ளார். இந்த செய்தி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.