மினிமம் பட்ஜெட்டில் தயாராகி வரும் கன்னட திரைப்படஙக்ள் கடந்த சில வருடங்களாகவே வசூலில் புலிபாய்ச்சல் காட்டி வரும் நிலையில், தற்போது உலக சந்தையைக் குறி வைத்து மலையாள திரைப்படங்களும் கோடிகளில் வசூலைக் குவிக்கிறது.
சமீபத்தில் ரிலீஸான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் ரூ. 200 கோடி வசூல் செய்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரைப்பட ஜாம்பவான்களை புருவம் உயர செய்துள்ளது. ‘காதல் கொண்டேன்’ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல், குணா படத்தின் க்ளைமேக்ஸ் இப்படி மாற்றியிருக்கலாமோ என தோன்றுவதாக குறிப்பிட்டிருந்தார். ‘குணா’ படத்தின் வேற வெர்ஷன் தான் ‘காதல் கொண்டேன்’ என்று அப்போது ரசிகர்கள் சிலாகித்தார்கள். இது அடுத்த இன்னிங்ஸ்.
மலையாளத்தில் ரிலீஸான ’பிரம்மயுகம்’, ‘கண்ணூர் ஸ்குவாட்’ படங்களை அடுத்து ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படமும் தமிழக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இப்போது தமிழை அடுத்து இந்தப் படத்தை தெலுங்கிலும் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள். ஏப்ரல் 6ஆம் தேதி திரையரங்குகளிலும் அதைத் தொடர்ந்து மே மாதம் 7ஆம் தேதி ஓடிடியிலும் வெளியாக உள்ளது.
கொடைக்கானல், குணா குகையில் சிக்கிக் கொண்ட தங்களது நண்பனை, உடன் சென்றிருந்த நண்பர்கள் உயிரைக் கொடுத்து எப்படி காப்பாற்றினார்க்ள் என்பதை எமோஷனலாக காட்சிப்படுத்தியப் படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’.
கிளைமாக்ஸ் காட்சியில் கமல் நடித்த ‘குணா’ படத்தில் இருந்து வெளியான ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டிருந்தது படத்தை தமிழ் ரசிகர்களிடையே இன்னும் கனெக்ட் செய்ய உதவியது.
படம் பார்த்துவிட்டு நடிகர்கள் கமல்ஹாசன் படக்குழுவினரை சந்தித்து பாராட்டினார். கமலின் தீவிர ரசிகராகிய இந்தப் படத்தின் இயக்குநர் சிதம்பரம், ‘தன் வாழ்நாள்’ கனவு நிறைவேறி விட்டதாக நெகிழ்ந்தார். கமல் மட்டுமல்லாது நடிகர்கள் விக்ரம், சிம்பு, தனுஷ் எனப் பலரும் பாராட்டினர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!