சிரஞ்சீவி கின்னஸ் சாதனை


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. 1978-ம் ஆண்டு நடிகராக அறிமுகமான இவர், தனது படங்களில் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார். 45 ஆண்டு திரை வாழ்க்கையில் 156 படங்களில் நடித்துள்ள அவர், 537 பாடல்களுக்கு நடனமாடி உள்ளார்.

இதில் 24,000-க்கும் அதிகமான நடன அசைவுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் வேறு எந்த நடிகரும் இந்த மைல்கல்லை எட்டவில்லை. இதைக் கவுரவிக்கும் விதமாக அவர் பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் அதற்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார் நடிகர் ஆமிர்கான்.

x