அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!


விஜய், வெங்கட்பிரபு

அப்டேட் கேட்டு தொல்லை செய்யும் ரசிகர்களை இயக்குநர் வெங்கட்பிரபு ட்விட் போட்டு சமாதானப்படுத்தியுள்ளார். நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கும்படி சிறப்பான சம்பவமாக அப்டேட் இருக்கும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

நடிகர் விஜய் தனது 68வது படமாக வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘GOAT' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய். இப்போது அவருக்கு இளவயதுக்கான போர்ஷன் படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் கிளைமாக்ஸ் போர்ஷனுக்காக கேரளா, திருவனந்தபுரத்தில் நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் சென்றிருந்தனர். கிளீன் ஷேவ் செய்து முடியை நேராக்கி விஜயின் தோற்றமே வேறு மாதிரி இருந்தது. இதற்காக இணையத்தில் நிறைய கேலியை விஜய் சந்தித்தார்.

இப்படியான சூழ்நிலையில்தான், இந்தப் படத்தின் அப்டேட் கேட்டு இயக்குநர் வெங்கட்பிரபுவை இணையத்தில் தொல்லை கொடுத்துள்ளனர் விஜய் ரசிகர்கள். இதற்குதான் அவர் ட்விட் மூலம் பதில் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர், " அநியாயம் பண்ணாதீங்க! ‘GOAT' படத்துடைய அப்டேட் சீக்கிரமே வரும் நண்பா, நண்பீஸ்!! என்னை நம்புங்கள், நீங்கள் இத்தனை நாட்கள் காத்திருந்ததற்கு ஏற்ற மாதிரி சிறப்பான அப்டேட்டாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.

முன்பாக, பிடிஎஸ் எனச் சொல்லி விஜயுடன் வெங்கட்பிரபு இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றைப் படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் படத்தின் முதல் பாடல், டீசர், டிரெய்லர், ரிலீஸ் டேட் என அடுத்தடுத்து எப்போது அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

x