தப்பா பேசாதீங்க... ரோபோ ஷங்கர் மகள் திருமணத்தில் கலங்கிய மதுரை முத்து மனைவி!


மனைவியுடன் மதுரை முத்து...

”புகழுக்காகவும் பணத்திற்காகவும் அடுத்தவர் குடும்பத்தைப் பற்றி தவறாக எழுத வேண்டாம். எங்கள் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்க்காதீர்கள்” என நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட மதுரை முத்துவின் மனைவி பேசியிருக்கிறார்.

இந்திரஜா திருமணம்...

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகக் கலக்கி வரும் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு கடந்த ஞாயிறன்று அவரது தாய்மாமா கார்த்திக்குடன் மதுரையில் திருமணம் நடந்தது. இதில் நடிகர்கள் சூரி, மதுரை முத்து உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிகழ்வில் மதுரை முத்துவின் மனைவி நீத்து எமோஷனலாகப் பேசியுள்ளார்.

“ஒவ்வொரு திரைப்பிரபலங்களின் வாழ்விலும் சொல்ல முடியாத பல பிரச்சினைகள் உண்டு. நாங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது உங்கள் கையில் தான் உள்ளது. எங்கள் கலையை ரசியுங்கள். ஆனால், எங்கள் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்க்க வேண்டாம். சிலர் பணத்திற்காகவும் தங்களுக்குப் புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இஷ்டத்திற்குப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.

மனைவி மற்றும் குழந்தைகளுடன்...

யார் குடும்பத்தையும் கெடுக்க வேண்டும் என்று நினைத்து தவறாக பேச வேண்டாம். திரைப்பிரபலங்களும் உங்களைப் போல மனிதர்கள் தான் என்பதைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள். இதைச் செய்தாலே நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம். உங்கள் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறோம்” என உருக்கமாகப் பேசியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு மதுரை முத்துவின் முதல் மனைவி விபத்து ஒன்றில் எதிர்பாராத விதமாக இறந்தார். அவர் இறப்பிற்குப் பிறகு தனது குழந்தைகளுக்காகவும், பெற்றோருக்காகவும், இறந்த முதல் மனைவியின் தோழி நீத்துவையே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் மதுரை முத்து. அதில் இருந்து இவர்களது திருமணம் குறித்தும், நீத்து பற்றியும் பல நெகட்டிவான விஷயங்களை இணையத்தில் சிலர் பரப்பி வந்தனர். இதனால், நொந்து போன நீத்து இவ்வாறு பேசியிருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

x