97-வது ஆஸ்கர் விருது; இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ‘லாபட்டா லேடீஸ்’!


சென்னை: இந்திய திரைப்படக் கூட்டமைப்பு 2024-2025ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் பரிந்துரைக்கான தெரிவுப் பட்டியலில் ஆறு தமிழ்ப் படங்கள் இடம் பெற்றிருந்தன. இறுதியில், ‘லாபட்டா லேட்டீஸ்’ திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் பிரிவில் இந்தியா சார்பாக அனுப்ப தேர்வானது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வருடா வருடம் ஆஸ்கார் விருது விழா நடைபெறும். இதற்காக ஒவ்வொரு நாடும் தங்களது சிறந்த படங்களை ஆஸ்கார் பரிந்துரைக்கு அனுப்புவார்கள். அந்த வகையில், 2024-2025ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் பரிந்துரைக்கு இந்திய திரைப்படக் கூட்டமைப்பு 29 திரைப்படங்களை தேர்வு செய்திருக்கிறது. இதில் ‘வாழை’, ‘தங்கலான்’,’ மகாராஜா’, ‘கொட்டுக்காளி’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ஜமா’ ஆகிய ஆறு படங்களும் இடம்பெற்றிருந்தது.

இந்தியில் ‘லாபத்தா லேடீஸ்’, ‘அனிமல்’, ‘கில்’ உட்பட 12 படங்களும், தெலுங்கில் ‘அனிமல்’, ‘கல்கி 2898ஏடி’ உட்பட ஆறு படங்களும், மலையாளத்தில் ‘உள்ளொழுக்கு’, ‘ஆடு ஜீவிதம்’, ‘ஆட்டம்’, ‘ஜொரம்’ ஆகிய நான்கு படங்களும், ஒடியாவில் ஒரு படமும், மராத்தியில் மூன்று என மொத்தம் 29 படங்களும் இடம்பெற்றிருந்தன. இதில் ‘லாபட்டா லேட்டீஸ்’ திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் பிரிவில் இந்தியா சார்பாக அனுப்ப தேர்வாகியுள்ளது.

x