’மெய்யழகன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது!


நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்திருக்கும் ‘மெய்யழகன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீவித்யா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘மெய்யழகன்’ படம் இம்மாதம் 27ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை ‘96’ படப்புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார்.

‘பருத்திவீரன்’, 'கொம்பன்’, ‘விருமன்’ போன்ற படங்களுக்குப் பிறகு நடிகர் கார்த்தி ‘மெய்யழகன்’ படத்தில் மீண்டும் ஒரு கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கார்த்தியின் அத்தானாக அரவிந்த்சாமி நடித்திருக்கிறார். இருவருக்கிடையே இருக்கும் இருக்கும் மாமன் - மச்சான் உறவை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள் என்பது டிரெய்லரில் வரும் காட்சிகளே உணர்த்துகிறது.

தஞ்சாவூரில் நடக்கும் கதைக்களத்தில் வெள்ளந்தியாக, விடாமல் வாய் பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. அமைதியாக பல உணர்வுகளை மனதில் தேக்கி வைத்திருக்கும் முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி. இருவரை சுற்றிதான் கதை பெரும்பாலும் நடக்கிறது என்பதையே டிரெய்லர் உணர்த்துகிறது. இவர்களுடன் நடிகர்கள் ராஜ்கிரண், ஸ்ரீவித்யா, தேவதர்ஷினி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர்.

x