நடிகை மகாலட்சுமிக்கு நள்ளிரவில் சர்ப்ரைஸ் கொடுத்த ரவீந்தர்... வைரலாகும் புகைப்படங்கள்!


ரவீந்தர்- மகாலட்சுமி

தன் மனைவி மகாலட்சுமி பிறந்தநாளுக்கு நள்ளிரவில் கேக் வெட்டி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இதுமட்டுமல்லாது, மனநலக் காப்பகத்திற்கும் சென்றிருக்கின்றனர். இதுதொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை மகாலட்சுமி.

அம்மா, அண்ணனுடன் மகாலட்சுமி.

எத்தனை சிக்கல், சச்சரவு வந்தாலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மகாலட்சுமி மீதான காதலை வெளிப்படுத்த ரவீந்தர் சந்திரசேகர் தவறுவதில்லை. அப்படியான வாய்ப்பாக மகாலட்சுமியின் பிறந்தநாள் அமைந்திருக்கிறது. அவரது பிறந்தநாளுக்காக நள்ளிரவில் மகாலட்சுமியை எழுப்பி கேக் வெட்ட வைத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் ரவீந்தர். பின்பு வீட்டிலேயே மகனுடன் பிரியாணி விருந்து சாப்பிட்டு மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது இந்த ஜோடி.

இதுகுறித்து, நடிகை மகாலட்சுமி புகைப்படங்களைப் பகிர்ந்து கூறியிருப்பதாவது, ‘இந்தப் பிறந்தநாளில் எனக்குக் கலவையான உணர்வு இருக்கிறது. முதலில் நள்ளிரவில் என் அம்மு என்னை எழுப்பி கேக் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்தார். அவர் எனக்குக் கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். பிறகு என் அம்மாவும், அண்ணனும் மனநல காப்பகத்திற்கு எங்களை அழைத்து சென்றனர். அங்கு உள்ளவர்களுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்தோம். என்னுடைய பையனும் எனக்கு கேக் கொடுத்தான். அது எப்போதுமே ஸ்பெஷல். எனக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’ எனக் கூறியுள்ளார்.

நடிகை, தொகுப்பாளினி எனப் பன்முகம் கொண்ட மகாலட்சுமிக்கும், திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த ஜோடி விரைவில் பிரிந்து விடும் எனப் பலரும் அந்த சமயத்தில் சொன்னார்கள். ஆனால், அதை எல்லாம் தாண்டி இரண்டு வருடங்கள் திருமண வாழ்வில் இவர்கள் இணைந்திருக்கிறார்கள். இந்தப் பிறந்தநாள் பரிசாக உடல் உறுப்பு தானம் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார் மகாலட்சுமி. இதற்குப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி தகவல்... அமலாக்கத் துறையின் அடுத்த குறி கார்த்தி சிதம்பரம்?

x