நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'தலைவர் 170'. இந்தப் படத்தில் நடித்து வரும் ரித்திகா சிங்குக்கு எதிர்பாராத விதமாக கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போழுது தன்னுடைய 170-வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டப் பலரும் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு முதலில் கேரளாவில் பூஜையுடன் தொடங்கியது.
அதன் பிறகு கன்னியாகுமரி, மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. தற்போது சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட இதன் படப்பிடிப்பில் கமல், ரஜினி இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரித்திகா சிங்கிற்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் கடுமையான ஆக்ஷன் காட்சி ஒன்றில் நடித்த போது தனக்கு கையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது என ரித்திகாசிங் கூறியுள்ளார். ஓநாய், மனிதனுடன் சண்டை போட்டது போன்று இருக்கிறது எனவும் அந்தப் புகைப்படங்களில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை எச்சரித்து கொண்டே இருந்தார்கள். கண்ணாடி இருக்கிறது எனச் சொன்னார்கள். ஆனால், இது எல்லாம் நடப்பது தான். சில நேரங்களில் இதுபோன்ற விஷயங்களை நாம் கண்ட்ரோல் செய்ய முடியாது தானே! நான் கண்ட்ரோல் இழந்ததால் இப்படி நடந்துவிட்டது" என ரித்திகா கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
மிக்ஜாம் புயல்... நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதி உதவி!
சென்னையில் முடங்கும் போக்குவரத்து...புறநகர் ரயில்கள் முற்றிலும் ரத்து!