மிக்ஜாம் புயல்... நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதி உதவி!


சூர்யா- கார்த்தி...

மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப் போட்டுள்ளது. இதுவரை கனமழையால் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் புயலால் பாதிக்க நான்கு மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா- கார்த்தி பத்து லட்ச ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை.

'மிக்ஜாம்’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி உதவி செய்வதாக அறிவித்துள்ளனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், கனமழைக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

நடிகர் சூர்யா

இந்த நிலையில் நிதி மட்டுமின்றி தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நடிகர்கள் சூர்யா, கார்த்தி வழங்க உள்ளனர். இந்த செயல், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

x