இளையராஜா புகாருக்கு மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர் பதில்


கோப்புப்படம்

மலையாளப் படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தமிழிலும் வசூலைக் குவித்தது. சிதம்பரம் இயக்கிய இந்தப் படத்தில் கமல்ஹாசன் நடித்த ‘குணா’ படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனது பாடலை அனுமதியின்றி படத்தில் பயன்படுத்தியதற்காக இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதில் இருந்து அந்தப் பாடலை நீக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் பாடலுக்கான உரிமை பணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாடலை அனுமதி பெற்றே பயன்படுத்தி இருப்பதாக மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர் ஷான் ஆண்
டனி தெரிவித்துள்ளார். “இந்த பாடலின் உரிமையை வைத்திருக்கிற பிரமிட், தேவி சவுண்ட்ஸ் நிறுவனத்திடம் அனுமதி பெற்றே பயன்படுத்தி இருக்கிறோம். இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் ஏதும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

x