ஆஸ்கர் நூலகத்தில் பார்க்கிங் திரைக்கதை


ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பார்க்கிங்’. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார்.

வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் திரைக்கதையை ஆய்வு நோக்கங்களுக்காகத் தங்கள் நூலகத்தில் வைப்பதற்கு ஆஸ்கர் அகாடமி கேட்டுக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து தெரிவித்துள்ள ஹரிஷ் கல்யாண், ‘ஒரு நல்ல திரைக்கதை அதற்கான இடத்தைத் தானே தேடிக்கொள்ளும்’ என்று கூறியுள்ளார்.

x